”சாதியை தூக்கிப்பிடிப்பவா்களுக்கு வரலாற்றில் இடமில்லை” - அமைச்சர் மெய்யநாதன்.

”சாதியை தூக்கிப்பிடிப்பவா்களுக்கு வரலாற்றில் இடமில்லை” - அமைச்சர் மெய்யநாதன்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்று துறை சார்பில்  இந்திய பன்பாடு பாரம்பரியம் மற்றும் . தொல்லியல் திருக்கோயில் கட்டிட கலை குறித்த மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கத்தின் நிறைவு நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசும்போது, தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் 45 ஆயிரம் திருக்கோவில்கள் உள்ளன நமது முன்னோர்கள் குறிப்பாக மன்னர்கள் கோவிலின் ஒரு பகுதியில் நந்தவனங்களை ஏற்படுத்தி கோவிலுக்கு தேவையான நறுமண மலர்கள் மட்டுமன்றி ஆக்ஸிசன் அதிக அளவில் வெளியிடும் மரங்களான அரசமரம், ஆலமரம், புங்கை உள்ளிட்ட மரங்களையும் வளர்த்து பால் வடியும் மரங்களை வெட்டக் கூடாது என்ற ஒரு வாழ்க்கை தத்துவ நியதியையும் ஏற்படுத்தியுள்ளனர் என்று கூறினார். 

மேலும், இன்றைக்கு நகரங்களில் காடுகள் அழிக்கப்பட்டாலும்  கோவில் நந்தவனங்கள் சுற்று சூழலை காப்பாற்றி வருகின்றன என்று கூறினார்.; மேலும் அதிக அளவில் மரங்களை வளர்க்கும் நிறுவனங்களுக் பசுமை விருது அளிக்கப்படுகிறதுகடந்த ஆண்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கு வழங்கியுள்ளோம் என்றும், அழகப்பா பல்கலைக்கழக வளாகத்திலும் ஏராளமான மரங்கள் உள்ளன; விருதுக்கு விண்ணப்பித்தால் பசுமை விருது வழங்கப்படும் என்று கூறினார்.

இதையும் படிக்க    }  "ஐஐடி யில் மிக குறைவான அளவில் தான்... மாணவர்களுக்கு போதை பழக்கம் உள்ளது" - ஐ.ஐ.டி இயக்குநர் காம கோடி.

மேலும் 100 நாடுகளில் தமிழர்கள் உயர் பதவியில் உள்ளனர் தமிழர்கள் ஜாதியினால் உயர் பதவியில் இல்லை ஆனால் ஜாதியை தூக்கி பிடிப்பவர்களுக்கு வரலாற்றில் இடம் கிடையாது என்று பேசினார் இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவிகீழடி தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க    }  வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்யும் அரிக்கொம்பன்...!!