”யார் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை விட, யார் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் தேவை” கனிமொழி பேச்சு!

”யார் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை விட, யார் வந்து விடக்கூடாது என்பதில் கவனம் தேவை” கனிமொழி பேச்சு!

நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொிவித்துள்ளாா். 

தென்காசி மாவட்டம் கடையத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழ்நாட்டில் எதிரிகள் படை எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எது உண்மையான செய்தி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிக்க : ”இனி வீதியில் நடந்து சென்றாலே வரி விதிப்பார்கள்” எடப்பாடி பேச்சு!

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒரு இடம் கிடைத்து விடாதா? என்று காத்துக்கொண்டிருக்கிறாா்கள் எனவும், இது பெரியார் மண் இதிலிருந்து ஒரு பிடி மண் தூசியைக் கூட எடுத்துச் செல்ல முடியாது எனவும் தொிவித்தாா். அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை விட, யார் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.