மணிப்பூரை விடுங்கள்...திமுகவில் எங்களுக்கு என்ன பாதுகாப்பு? திமுக உட்கட்சி பூசல்!

மணிப்பூரை விடுங்கள்...திமுகவில் எங்களுக்கு என்ன பாதுகாப்பு? திமுக உட்கட்சி பூசல்!

மணிப்பூா் வன்முறையை கண்டித்து தென்காசியில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பெண் நிா்வாகியும், மாவட்ட செயலாளரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே திமுக உட்கட்சி பூசல் நிலவி வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செல்லதுரை, கட்சி தலைமையால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சங்கரன் கோவில் எம்.எல்.ஏ. ராஜா, மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரம் அந்த சமயம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனைத்தொடர்ந்து தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுக்கும், செல்லத்துரை ஆதரவாளராக கருதப்படும் மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்விக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.  

இந்நிலையில் தென்காசியில் பாஜகவிற்கு எதிராக திமுக சாா்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக பெண் நிா்வாகி தமிழ்செல்வி பங்கேற்று பேசினாா். ஆனால் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் அவரை பேச விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வி “மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து போராடுகிறோம், அதற்கும் இங்கு நடப்பதற்கும் என்ன வித்தியாசம்” என்று கோபத்துடன் மாவட்ட பெண் சேர்மன் தமிழ்செல்வி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : “பெண் ஏன் அடிமையானாள்?” - முதலமைச்சர் ட்வீட்! 

இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆதரவாளர்கள் தமிழ்செல்வி கையில் இருந்த மைக்கை பிடுங்கிவிட்டு, மேடையி நின்றுகொன்று என்னமா பேசுற என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மணிப்பூரில் நடந்த வன்கொடுமையை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சொந்த கட்சியினரே ஒருவரையொருவர் சண்டையிட்டு கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.