திருமாவளவனுக்கு மதம் பிடித்து உள்ளது....எச் ராஜா பகீரங்க பேச்சு....!!

ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச். ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருமாவளவனுக்கு மதம் பிடித்து உள்ளது....எச் ராஜா பகீரங்க பேச்சு....!!

சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிரிஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் யா.சு.கண்ணன் எழுதிய "நேரு-ஒரு மாயையின் மறுபக்கம்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. புத்தக வெளியீட்டு விழாவில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

அதன் பின்னர் பேசிய அவர் கூறுகையில்,

காங்கிரஸ் கட்சிதான் நாடு பிளவுபட காரணமாக இருந்தது என்றும் நேருவின் நிர்பந்ததால் எடுக்கபட்ட முடிவுகளால் தான் நாட்டில் பிரிவினை ஏற்பட்டது எனவும் காஷ்மீரின் பிரச்சனைக்கு காரணம் நேருதான் என்றார்.

நேருவை பற்றி பள்ளியில் பேசி பரிசுகள் வென்று உள்ளேன் என கூறிய அவர், எங்கள் மாமா நேரு, ரோஜாவின் ராஜா என்றெல்லாம் பேசி இருக்கிறேன் ஆனால் அதற்கு பிராயசித்தமாக இப்போது எதிர்த்துப் பேசுகிறேன்.  
என் ஸ்டைல்ல சொல்லனும்னா கையளவு இடம் இருந்தாலும் அதுல பிரதமராக வேண்டும் என்று யோசித்தவர் நேரு என கூறினார்.

அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறுகையில்,  

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது பற்றிய வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் திருமாவளவன் பேசியது அனைத்தும் பொய், அவருக்கு மதம் பிடித்து உள்ளது என்றார்.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியபோது, நாங்கள் என்ன எலிகளா எனக் கேட்டவர் தான் முதல்வர் ஸ்டாலின், ஆனால் தற்போது எல்லோரையும் தடுப்பு ஊசி செலுத்த சொல்கிறார். அது வேற வாய் இது வேற வாய் என்று கூறினார்.

தற்போது நடைபெறுவது கிறிஸ்தவர்களின் ஆட்சி என முதல்வர் ஸ்டாலின் அவரது வாயாலே கூறியுள்ளார். அதனால் தான் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார் என கூறிய அவர், தமிழகத்தில் CSI ஆட்சிதான் நடக்கிறது. இது ஆன்டி ஹிந்து கவர்ன்மெண்ட் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தினம் ஒரு கோயிலை  இடிப்பது என ஸ்டாலின் முடிவு செய்துள்ளார் என்றும்  கோயில்கள் இடிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என தெரிவித்தார்.