தியாகராஜ சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா ஊஞ்சல் உற்சவ நிகழ்வோடு தொடக்கம்...

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா ஊஞ்சல் உற்சவ நிகழ்வோடு கோலாகமாக தொடங்கியது.
தியாகராஜ சுவாமி கோயிலில் திருவாதிரை திருவிழா ஊஞ்சல் உற்சவ நிகழ்வோடு  தொடக்கம்...
Published on
Updated on
1 min read

வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் திருவாதிரை திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் விழாவின் துவக்க நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு தோற்றத்தில் அம்பாளுடன் எழுந்தருளிய கல்யாணசுந்தரருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

இதேபோன்று, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, குற்றாலநாதரின் அருளை பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி சர்வசக்தி விநாயகர் கோவிலில் ஐயப்பன் மலர்பூஜை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த மலர் பூஜையில் குருசாமிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டு சென்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com