கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கொண்டவர்கள் அதிமுகவினர்....செல்லூர் ராஜு....!!

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கொண்டவர்கள் அதிமுகவினர்....செல்லூர் ராஜு....!!

அதிமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கொண்டவர்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
Published on

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில், 

அதிமுக ஒரு அருமையான அமைப்பாக இருக்கிறது, மக்கள் அதிமுகவை 31 ஆண்டுகள் ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்தவர்கள். அதிமுக சாதனை மேல் சாதனை செய்து கொண்டு வருகிறது என்றும்  அதிமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கொண்டவர்கள் என்றார்.

அதிமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்ற ராமதாஸ் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, பாமக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது, அவர்கள் விலகிய பின் பேசும் கருத்துக்களுக்கு  எப்படி பதில் சொல்ல முடியும். பாமகவினர் பேசுவதற்கு அதிமுக தலைவர்கள் பதில் சொல்வார்கள் என கூறினார்.

மேலும் நகர்புற தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கூறிய அவர், திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்றார்.

தொடர்ந்து பாஜக தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது, அடிக்கடி போராட்டம் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்கு,

பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்களின் செயல்பாடுகள் அப்படி தான் இருக்கும் என கூறிய அவர், யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. மக்களை கவரும் வகையில், எண்ணத்தை பிரதிபலிக்கிற போராட்டத்தை, அரசுக்கு வலுவான கருத்தை எடுத்துரைக்கும் போராட்டமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com