மொழித் தேர்வு எழுதாதவர்கள் பிற தேர்வுகளை எழுத நடவடிக்கை - அன்பில் மகேஷ் பேட்டி!

மொழித் தேர்வு எழுதாதவர்கள் பிற தேர்வுகளை எழுத நடவடிக்கை - அன்பில் மகேஷ் பேட்டி!

Published on

12-ம் வகுப்பில் மொழித் தேர்வு எழுதாத மாணவர்கள் பிற தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 


12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மொழித் தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்நிலையில், 50ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது ஏன்? என்பது குறித்தும், அதற்கான, காரணங்கள் குறித்தும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்கும் முனைப்புடன் செயல்படுவதாக கூறினார். மேலும், இட மாற்றம், அச்சம் உள்ளிட்ட காரணங்களால் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று தெரியவந்துள்ளது. மொழித் தேர்வு எழுதாத மாணவர்கள் பிற தேர்வுகளை எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

தொடர்ந்து, மாணவர்களை தேர்வு எழுத பெற்றோர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், பள்ளிக்கு வராத மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com