உதயநிதி பேச்சு; "புரிந்துகொள்ள வேண்டியவர்கள், புரிந்துகொண்டார்கள்" செஞ்சி மஸ்தான் விளக்கம்! 

உதயநிதி பேச்சு; "புரிந்துகொள்ள வேண்டியவர்கள், புரிந்துகொண்டார்கள்" செஞ்சி மஸ்தான் விளக்கம்! 
Published on
Updated on
1 min read

சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதியின் பேச்சை புரிந்து கொள்ள வேண்டியவர்கள், புரிந்து கொண்டார்கள் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியுள்ளார். 

விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனை கூட்டம் செஞ்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியா என்ற சொல் மீது வெள்ளை அடித்து விட்டு பாரத் என்கின்ற எழுதுகின்ற வேலைக்கு சென்றுவிட்டார். இந்தியாவை ஆளப்போவது திராவிட மாடல் ஆட்சி. இதை மக்கள் முடிவு செய்து உள்ளார்கள். தமிழ்நாடு, தென் மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் மக்கள் இதில் உறுதியாக இருக்கிறார்கள் எனக் கூறினார். 

மேலும், இந்தியாவுடைய பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட நான்கு நபர்களுக்கு அடமானம் வைக்கின்ற கூட்டம் தான் அந்த பிஜேபி கூட்டம். அதனால் தான் உதயநிதியுடைய பேச்சுக்கு வானத்துக்கும் பூமிக்கும் அந்தக் கூட்டம் எகிறி குதிக்கின்றார்கள் என்றார். 

தொடர்ந்து அமைச்சர் உதயநிதியின் தலைக்கு உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த சாமியார் ரூ.10 கோடி விலை வத்திருப்பதை குறித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், அதைப்பற்றி அஞ்சுகின்ற கூட்டம் திராவிட முன்னேற்ற கழகம் அல்ல. எந்த காலத்திலும் கொள்கைக்காக உறுதியாக இருக்கின்ற கூட்டம். கொள்கை போராட்டத்தில் வலுவாக இருக்கின்ற கூட்டம். அந்த அளவில்தான் அவருடைய ( அமைச்சர் உதயநிதி)  பேச்சும்.  இது யாரையும் சங்கடப் படுத்துகின்ற பேச்சு அல்ல. எந்த இடத்திலும் அதற்கான குறிப்பும் இல்லை. இந்த பேச்சினை புரிந்து கொள்ள வேண்டியவர்கள், புரிந்து கொண்டார்கள்.  வட மாநிலங்களில், உதயநிதி பேனரை வைத்து பால் அபிஷேகம் செய்து, பழங்குடி மக்கள் எல்லாம் கடவுளாக அவரை வணங்குகின்ற செய்தியும் ஒரு பக்கம் பார்க்கின்றோம். அதை பார்க்கும்போது அவர்களுக்கு (பாஜக) எரிகிறது எனக் கூறினார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com