கனமழையால் பல  ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை...

தஞ்சை ,திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்கயில்  பல  ஆயிரம் ஏககர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். மழை நீர் வடியாததற்கு  ஆக்கிரமிப்புகள் அகற்றாதது தான் காணரம் என கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ராவிடம் விவசாயிகள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர்.

கனமழையால் பல  ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை...

நாகை மாவட்டத்தில் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  கூடுதல் தலைமை செயலாளர் அப்துல் மிஸ்ரா இன்று  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருப்பூண்டி பகுதியில் தண்ணீரில் மூழ்கியுள்ள இளம் சம்பா பயிர்களை பார்வையிட்ட அவர் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்போது கன மழை பெய்து மூன்று நாட்களாகியும் வயல்வெளிகளில் மழைநீர் வடியாததற்கு  ஆக்கிரமிப்பே  காரணம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தொடர்ந்து  வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டார் அப்போது விவசாயிகள் மூழ்கிய பயிர்களை எடுத்து அழுகி சேதமடைந்து இருப்பதை கண்ணீர் மல்க காண்பித்தனர். இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் ஓரிரு  கணக்கெடுப்பு  பணிகள் முடிக்கப்பட்டுஉரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் பெய்த தொடர்  கனமழையால், வளையப்பேட்டை மாங்குடி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. அத்துடன்,  விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் பரிதவித்து  வருகின்றனர்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர்  தினேஷ் பொன்ராஜ், மாவட்ட கண்காணிப்பு அலுவலகர் விஜயகுமார் அகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே காரை, சிறுவாக்கம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி கால்வாயில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியது.
இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.