அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் ; 5 ஆண்டு சிறை!!!

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் ; 5 ஆண்டு சிறை!!!

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் ; 5 ஆண்டு சிறை!!!

கொடைக்கானலில் அரசு அதிகாரிளுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜேசிபி ஓட்டுனருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திக்கேயன் தீர்ப்பளித்தார்.

தொடர்மழை நிலச்சரிவு

கொடைக்கானல்: தமிழ் நாடு சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் தொடர்மழை காரணமாக மலைப்பகுதியில் ஈரப்பதம் அதிகரித்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால்  சுற்றுலாப்பயணிகளின் வருகை, சரக்கு உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருக்கிறது.அப்பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால்  அங்கு வசிக்கும் மக்கள் மிகவும்  சிரமித்திருக்கு உள்ளாகின்றனர்.ஏற்கனவே  மலைப்பகுதிகளில் கனரக வாகனங்கள் இயக்க கூடாது என்று தடை விதித்திருந்தும் வாகனங்கள் 
 அத்துமீறி இயக்குப்பட்டு வருகின்றது.

கொலை மிரட்டல் :

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்குவதற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான கூக்கால் கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் அரசு வருவாய் நிலத்தில் அனுமதியில்லாமல் ஜேசிபி வாகனம் இயக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி பெண் கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து கேட்டபோது  ஜேசிபி வாக‌ன‌ ஓட்டுன‌ர் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.  வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் இது குறித்து கேட்கும் போது ஜேசிபி வாகனத்தை கொண்டு இவ‌ர்க‌ள் வ‌ரும் வ‌ழியில் ப‌ள்ள‌ம் பறித்து இடையில் ம‌றித்து அவ‌ர்க‌ளுக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ள‌ளார்.

வழக்கு விசாரணை;அதிரடி தீர்ப்பு :

இதனை தொடர்ந்து , வட்டாட்சியர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கானது  கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரணை செய்த  நீதிபதி ஜேசிபி வாகனத்தை இயக்கிய சுரேஷ் என்பவருக்கு அரசு அதிகாரிகளை அரசு பணிகளை முறையாக‌ செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியற்காகவும்,அரசு அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.மேலும் ஜேசிபி இயக்கியதற்கு உட‌ந்தையாக‌ இருந்த அன்பழகன் மற்றும் கற்பகநாதனுக்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.