குடிபோதையில் பெண்களிடம் தகராறு ...ஆயுதங்களை சுழற்றியபடி ஆபாச வார்த்தைகளை அள்ளி தெளித்த ரவுடி கும்பல்

குடிபோதையில் பெண்களிடம் தகராறு ...ஆயுதங்களை சுழற்றியபடி ஆபாச வார்த்தைகளை அள்ளி தெளித்த ரவுடி கும்பல்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே குடிபோதையில் மூன்று இளைஞர்கள் கத்தி, அரிவாளை சுழற்றியபடியே பெண்களிடன் தகராறு செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ளது குதிரைப் பாஞ்சான் என்ற கிராமம். இந்த கிராமத்தில் நேற்று மூன்று ரவுடிகள் குடிபோதையில் கையில் அரிவாள் மற்றும் கத்திகளுடம் தெருவில் உலா வந்தனர்.’

ஆயுதங்களை சுழற்றியவாறு ஆபாச வார்த்தைகளால் வசைபாடி சென்ற அவர்களை, கண்ட அந்த பகுதி பெண்கள், ரவுடிகளின் அடாவடியை தட்டி கேட்டும், தங்களின் செல்போனில் வீடியோ எடுத்தும் வலைதளத்தில் பதிவு செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள் மூவரும் வீடியோ எடுத்த பெண்களுடன் தகராறு செய்து வீட்டுக்குள் புகுந்து தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். ரவுடிகளின் அட்டுழியத்தை கண்டு கடுப்பாகிய அந்த கிராமத்து இளைஞர்கள் சிலர், உடனடியாக கடையல் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததுடன், பெண்களை தாக்கிய அவர்களை அங்கிருந்து அடித்து விரட்டினர்.

தகவலின்பேரில் அந்த பகுதிக்கு வந்த கடையம் போலீசார், இரு தரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com