தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நீலகிரி,  தேனி, கோவை,  சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்,தேனி, தென்காசி, சென்னை ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென் மேற்கு, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்று அதிக அளவில் வீசும் எனவும், எனவே அடுத்த நான்கு   நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.