புலி தாக்கி விவசாயி பலி - அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி விவசாயி பலியான நிலையில் உடலை அதிகாரிகள் எடுத்து செல்ல விடாமல் ஊர்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

புலி தாக்கி விவசாயி பலி -  அதிகாரிகளை முற்றுகையிட்ட மக்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புலி தாக்கி விவசாயி பலியான நிலையில் உடலை அதிகாரிகள் எடுத்து செல்ல விடாமல் ஊர்மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

கூடலூர் அருகே முதுமலை ஊராட்சியில் நெங்கன கொல்லி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குஞ்சி கிருஷ்ணன். இவர் நேற்று கடைக்கு சென்று வரும் போது புலி  தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு  சென்ற வனத்துறை அதிகாரிகள் உடலை பிரேதப் பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆனால் அப்பகுதி மக்கள் தங்களுக்கு சரியான பாதுக்காப்பை வனத்துறையினர் வழங்கவில்லை என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு  சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.