இன்று கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும்!

சென்னை முழுவதும் இன்று கோவாக்சின் மற்றும் கோவிஷூல்டு ஆகிய  இரண்டு தடுப்பூசிகளும் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும்!

சென்னை முழுவதும் இன்று கோவாக்சின் மற்றும் கோவிஷூல்டு ஆகிய  இரண்டு தடுப்பூசிகளும் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கோவிஷீட்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், இன்று சென்னையில் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்படவுள்ளது. அதில் கோவாக்சின் தடுப்பூசி இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு மட்டுமே போடப்படுவதாகவும், கோவிஷூல்டு தடுப்பூசி ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு 100  தடுப்பூசி, நேரடியாக வந்து போட்டு கொள்பவர்களுக்கு 200 தடுப்பூசி என மொத்தம் 300 தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.