உண்மையான பகுத்தறிவு வாதியாக விளங்கிய சிங்காரவேலனின் 77-வது நினைவு நாள் கடைபிடிப்பு!

உண்மையான பகுத்தறிவு வாதியாக விளங்கிய சிங்காரவேலனின் 77-வது நினைவு நாள் கடைபிடிப்பு!

தமிழ்நாட்டின் பொதுவுடமைவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான சிங்காரவேலரின் 77 வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுவுடமை சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்பியதால் சிந்தனை சிற்பி என அனைவராலும் போற்றப்படும் சிங்காரவேலரின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை காமராஜர் சாலை, லேடி வெல்டிங் பள்ளி வளாகத்தில் உள்ள சிங்காரவேலரின் நினைவிடத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அவர்கள், காமராஜர் சாலையில் இருந்து அமைதி பேரணியாக சென்றனர். 

இதனைத் தொடர்ந்து, லேடி வெலிங்டன் வளாகத்தில்  சிங்காரவேலருக்கு நினைவரங்கம் அமைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் மீனவ சங்கத்தினர் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வளாக பகுதியில் உள்ள இடத்தை பார்வையிட்டார். 

இதையும் படிக்க : சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 98.59 கோடி நிதி ஒதுக்கீடு...!

இதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிங்காரவேலன் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், பகுத்தறிவு என்று கூறிவிட்டு கோவில்களுக்கு செல்பவர்கள் இன்று இருக்கக்கூடிய நிலையில், அன்றே உண்மையான பகுத்தறிவு வாதியாக விளங்கியவர் சிங்காரவேலன் என பெருமைபட கூறினார்.

தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதியாக கருதப்படும் சிங்காரவேலர் தொழிற்சங்க வாதியாகவும் மே தினத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர். தனது சிந்தனைகள் தொடர்பாக சில நூல்களையும் எழுதி உள்ளார். வருகின்ற தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நினைவிடம் அமைப்பதற்கான வாய்ப்பு  இருப்பதாக கூறப்படுகிறது.