மாலை 5 மணி வரையிலான தலைப்புச் செய்திகள்...!

இன்று மாலை 5 மணி வரையிலான தலைப்புச் செய்திகள் பார்க்கலாம்....

மாலை 5 மணி வரையிலான தலைப்புச் செய்திகள்...!

மோடிக்கு எதிர்ப்பு; கருப்பு பலூன்களை பறக்கவிட்ட காங்கிரசார்

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் கருப்பு பலூன்களை பறக்க விட்ட காங்கிரசார். ஹெலிகாப்டருக்கு மிக அருகில் பறந்ததால் அதிர்ச்சி; விசாரணைக்கு உத்தரவு .


தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-ம் இடம்

தொழில் தொடங்குவதற்கு தேர்வுசெய்யப்பட்ட  சிறந்த மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்...


அதிமுக பொதுக்குழு-தனி நீதிபதியை அணுகுக..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோர தனி நீதிபதியை அணுக வேண்டும் என ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை...


ஈ.பி.எஸ் பொதுச்செயலர் ஆவதை தடுக்க முடியாது

ஜுலை 11 ஆம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடக்கும் என்றும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலராவதை யாராலும் தடுக்க முடியாது என கேபி முனுசாமி ஆவேசம்.

மத்திய அமைச்சருக்கு  முதலமைச்சர் கடிதம்

சிங்கள படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ -5 வீடுகள் சேதம்

குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அருகில் இருந்த 5 வீடுகள் சேதமடைந்ததோடு, 
தீயில் சிக்கி  கொண்ட முன்னாள் இராணுவ வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்

வாடகையை உயர்த்த கோரி சென்னை துறைமுக கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம். பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் முடங்கியது.

300 யூனிட் மின்சாரம் இலவசம்...!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் 300 யூனிட் மின்சாரம் இலவசம். ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.

உடல்களை மீட்கும் பணி தீவிரம்

ஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12  பேர் உயிரிழந்த பரிதாபம். மலை அடிவாரத்தில்  சிக்கியவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரம்.

இரண்டு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் இரண்டு குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி.
குடும்ப பிரச்சனை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்ல என குற்றச்சாட்டு.

மதுப்பிரியர்களின்  கூடாரமாகும் சின்னசுருளி

மதுப்பிரியர்களின்  கூடாரமாகும் சின்னசுருளி அருவியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்.
போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை.


ஈச்சர் வேனும் - டாரஸ் லாரியும் மோதி விபத்து

பல்லடம் அருகே  ஈச்சர் வேனும் - டாரஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து. சாலையின் நடுவே லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நெல்லை அருகே ஆட்டு வியாபாரி கொலை செய்யப்பட்ட விவகாரம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.