தக்காளி விலை உயர்வு...அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை...!

தக்காளி விலை உயர்வு...அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை...!

Published on

தக்காளி விலை உயர்வு தொடர்பாக, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

தக்காளி வரத்து குறைந்ததால் நாளுக்கு நாள் விலை அதிகரித்து இன்று கிலோ 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் கூட்டுறவுத் துறை சார்பில் பண்ணைப் பசுமைக் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தக்காளி விலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், நாளை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தக்காளி விலைக்குறைப்பு, நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com