கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கிடுகிடுவென அதிகரித்து கிலோ 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு!!

வங்க கடலில் உருவான அசானி புயல் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாகவும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைந்த காரணத்தாலும் தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளியின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

அதன்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி மொத்த விற்பனையில் கிலோ ஒன்றுக்கு 70 ரூபயாகவும், சில்லறை விற்பனையில் கிலோ ஒன்றுக்கு 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.