தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வு - பொதுமக்கள் கடும் அதிருப்தி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வு - பொதுமக்கள் கடும் அதிருப்தி

வெளிமாநிலங்களில் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைவு, மழையால் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ  நவீன தக்காளி  85 முதல் 90 ரூபாய்க்கும், நாட்டு தக்காளியின் விலை 70 முதல் 80 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. விலை குறைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.