நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை கன மழை எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை விடுமுறை

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாளை உள்ளுர் விடுமுறை

இதேபோல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு நாளை உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்டு 27 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உத்தரவிட்டுள்ளார்.