அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களே ஒரு முக்கிய அறிவிப்பு...!

அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்களே ஒரு முக்கிய அறிவிப்பு...!

அரசு கலைக்கல்லூரிகளில் சேர விண்ணப்பப்பதிவு செய்வதற்கு நாளை கடைசி நாள் என்று கல்லூரி கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கல்லூரிக்கல்வி இயக்குநகரத்தின் கீழ் 164 அரசு கலைக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் இணையவழி விண்ணப்ப பதிவு மாணவர் சேர்க்கை கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி, இணையவழி மூலம் இதுவரை  2 லட்சத்து 97 ஆயிரத்து 985 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில்,  ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 9 பேர் மட்டுமே கட்டணம் செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதேபோல் கடந்த 5-ஆம் தேதி தொடங்கிய எஞ்ஜினியரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவில், இதுவரை ஒரு லட்சத்து 40ஆயிரத்து 339பேர் விண்ணப்பப்பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதையும் படிக்க : 4 சதவிகித அகவிலைப்படியை... ஜன.1ம் தேதியிலிருந்தே வழங்க வேண்டும்...அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

இந்நிலையில் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நாளையுடன் அதாவது மே 19 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விரைவாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 

மேலும், விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23 ஆம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும், அதன்பின் சேர்க்கை கலந்தாய்வு மே 25 முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.