நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்....

வார விடுமுறை நாட்கள் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிலும் முக்கியமாக பைக்காரா படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்....

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்கு வருகை புரிவது வழக்கம் . தற்போது கொரோனா நோய் தொற்று ஊரடங்கிற்கு பின் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை புரிந்துள்ளனர். இதற்கிடையில் விடுமுறை நாளான இன்று உதகை அருகே உள்ள பைக்காரா படகு இல்லத்தில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

தண்ணீரை கிழித்துக்கொண்டு சீறியபடி சென்ற அதிவேக படகில், சுற்றுலா பயணிகள் சவாரி செய்து குதூகலம் அடைந்தனர். 3 அதிவேக படகுகள் மட்டும் இருந்ததால், சவாரி செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முன்னதாக சுற்றுலா பயணிகள் அனைவரும் உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.   மேலும் நீலகிரியில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையை  குடும்பத்துடன் கண்டு ரசிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.