வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!!..

புத்தாண்டு மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். 

வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!!..

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில்,  புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு  கொடைக்கானலில் நிலவும் குளிர்ச்சியான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் குளிரையும் பொருட்படுத்தாமல் படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

இதேபோல், புத்தாண்டை முன்னிட்டு குன்னூர் மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குன்னூர் மலை ரயில் நிலையம்  களைகட்டியது. புத்தாண்டு விடுமுறையை குடும்பத்துடன் அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி நோக்கி படையெடுத்து வருகின்றனர். குளு குளு சூழலில் படகு சவாரி செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.