குற்றால அருவிகளில் குளிக்க தடை .. ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்!!

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

குற்றால அருவிகளில் குளிக்க தடை .. ஏமாற்றத்துடன்  திரும்பும் சுற்றுலா பயணிகள்!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

குற்றாலத்தில் கனமழை:

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

வெள்ள பெருக்கில் சிக்கி பெண்கள் இருவர் பலி:

மெயின் அருவியில் சீராக நீர்வரத்து இருந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டாற்று வெள்ள பெருக்கில் சிக்கி பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

3வது நாளாக அருவிகளில் குளிக்க தடை:

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஐந்தருவி, பழையகுற்றாலம் அருவிகள் மற்றும் மெயின் அருவியில் அவ்வப்போது நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 3வது நாளாக இன்றும் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.