கன்னியாகுமரி: சுற்றுலாத் தலங்களை பார்க்க முடியாமல் ஏமாற்றம்!!

வார விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாத் தலங்களை பார்க்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி: சுற்றுலாத் தலங்களை பார்க்க முடியாமல் ஏமாற்றம்!!

கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்படுவதால் பார்வையாளர் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகுப் போக்குவரத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி குவிந்த சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தையாவது பார்த்து விடலாம் என அதிகாலை முதலே காத்திருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக அந்த நிகழ்வும் ஏமாற்றத்தையை அளித்தது.

இதையடுத்து கடற்கரையில் குடும்பத்துடன் கால் நனைத்து விளையாடி வருகின்றனர். அலையின் வேகம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கவனத்துடன் கடலில் இறங்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.