சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து ஆணையம் திட்டம்!!

சென்னையில் வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்தில் சில மாற்றங்களை செய்ய சென்னை போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்..  வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து ஆணையம் திட்டம்!!
Published on
Updated on
1 min read

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கட்டுக்கடங்காமல் உள்ளது. 

அலுவல பணி நேரம் மட்டுமின்றி நாள் முழுவதும் சென்னை மாநரகரின் முக்கிய சாலையில் வாகனங்கள் நெரிசலால் வரிசை கட்டி நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அலுவலக நேரங்களில்  வாகன நெரிசலால் சென்னையில் முக்கிய சாலைகள் ஸ்தம்பிக்கும் நிலை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்த போக்குவரத்தில் சில மாற்றங்களை செய்ய சென்னை போக்குவரத்து காவல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

நெரிசலைக் குறைக்கும் வகையில் பூந்தமல்லி சாலை, மேக் நிக்கோலஸ் சாலை, சேத்துப்பட்டு சந்திப்பு மற்றும் காசி தியேட்டர் சந்திப்பு ஆகிய இடங்களிலும் தாசப்பிரகாஷ் சந்திப்பு உள்ளிட்ட இடங்களிலும் போக்குவரத்து விதிகளில் மாற்றங்களை செய்ய போக்குவரத்து காவல் துறை முடிவு செய்துள்ளது.

இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  டாக்டர் அழகப்பா சாலை முதல் ஈவிஆர் சாலை வரை காலை 9 மணி முதல் 11 மணி வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது.

சேத்துபட்டு சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் ஹாரிங்டன் சாலையை கடக்க காலை 6 மணி முதல் 8 மணி வரை தடை விதிக்கப்பட உள்ளது.  இதேபோல் நகரின் பிற முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com