கரும்பு அரவை இயந்திரத்தால் ஏற்பட்ட விபரீதம்..!

கரும்பு அரவை இயந்திரத்தால் ஏற்பட்ட விபரீதம்..!

திருத்தணி அடுத்த திருவலாங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவைக்கு பதிவு செய்யுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆலையில் 1 லட்சம்  டன் கரும்பு அரவை செய்யப்பட உள்ளது. அதனால் இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்த சிவா(58) இயந்திரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிவாவின் கைவிரல்கள் இயந்திரத்தில் சிக்கியது. இதனால்  மூன்று விரல்கள் துண்டானது.

பின்னர் சக ஊழியர்கள் சிவாவை மீட்டு, சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். விரல்கள் துண்டாகியதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிவா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.