ஊஞ்சல் விளையாட்டால் நேர்ந்த விபரீதம்...!

ஊத்தங்கரை அருகே சேலை ஊஞ்சலில் விளையாடும் போது 7-வயது சிறுவன் உயிரிழப்பு...
ஊஞ்சல் விளையாட்டால் நேர்ந்த விபரீதம்...!
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் வசிப்பவர் செந்தில் குமார் - அம்சவேணி தம்பத்தியர். இவர்களுக்கு  எஸ்வந்த்(7), அபிதா (4) என்கிற இருக்குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கட்டிய சேலையில் சிறுவனுடைய கழுத்துப்பகுதி மாட்டிக் கொண்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த தாய், சிறுவன் மயங்கி இருந்தை அறிந்து ஊத்தங்கரை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பபட்டது. இதுகுறித்து ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com