ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்.. மத்திய அரசு முடிவுக்கு கிளம்பியது எதிர்ப்பு

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்.. மத்திய அரசு முடிவுக்கு கிளம்பியது எதிர்ப்பு

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மத்திய சமூக நிதி அமைச்சகம் பெருமையடிப்பது திருநங்கைகளுக்கு ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை திருநங்கை சுதா எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.  

சென்னையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருநங்கைகளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் அல்லது அவர்களுக்கு பிறப்பினால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய சுதா, தமிழக அரசு திருநங்கைகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை வழங்கி வரும் நிலையில் தற்போது மத்திய அரசு இதுபோன்று அறிவித்திருப்பது ஏற்க முடியாமல் உள்ளதாகவும், இதனைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.