எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும் - நடத்துநர்களுக்கு  போக்குவரத்துத்துறை உத்தரவு

பயணிகளுக்கு எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும் என அரசு பேருந்து  நடத்துநர்களுக்கு  போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும் - நடத்துநர்களுக்கு  போக்குவரத்துத்துறை உத்தரவு
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்த சூழலில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் போது நடத்துநர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.அதில் பேருந்தில் பயணச்சீட்டு வழங்கும் போது சில நடத்துநர்கள் எச்சில் தொட்டு பயணச் சீட்டுகளை  வழங்குவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அதனால்  பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனவே  சுகாதார சீர்கேடு விளைவிக்கும் இந்த முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணச்சீட்டு வழங்கும் போது நடத்துநர்கள் தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை பயன்படுத்தி வழங்க வேண்டும் எனவும் எச்சில் தொடாதவாறு பயண சீட்டு வழங்க வேண்டும்" எனவும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com