சாய் சில்க்ஸ் கலா மந்திர் குழுமம்: 2 வது நாளாக தொடரும் சோதனை...ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா?

சாய் சில்க்ஸ் கலா மந்திர் குழுமம்: 2 வது நாளாக தொடரும் சோதனை...ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா?
Published on
Updated on
1 min read

சாய் சில்க்ஸ் கலா மந்திர் குழுமத்திற்கு சொந்தமான காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் உள்ளிட்ட 60 இடங்களில் 2-வது நாளாக வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 


சாய் சில்க்ஸ் கலா மந்திர் குழுமம் "கலா மந்திர்", "மந்திர்", "காஞ்சிபுரம் வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ்" போன்ற பெயர்களில் பெண்களுக்கான பிரத்தியேக பட்டு புடவைகள் மற்றும் வட மாநில கலச்சார துணி வகைகளை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்த குழுமம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரை தொடர்ந்து, தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை சோதனையை தொடங்கினர். 

இதன் ஒருபகுதியாக, சென்னை தியாகராய நகரில் இயங்கி வரும் காஞ்சிபுரம் வர மகாலட்சுமி சில்க்ஸ் கடையில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக இன்று சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் மயிலாப்பூர், அண்ணா நகர், பாண்டி பஜார் ஆகிய இடங்களில் இயங்கி வரும் துணி கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற சோதனையின் அடிப்படையில், ரொக்கப் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com