ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் கைது..!

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற விசிகவினர் கைது..!
Published on
Updated on
1 min read

அரியலூரில் ஆளுநர் ஆர் என் ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவேடு மருதூர் தாலுக்கா ஒரு கச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் தமிழ்நாடு சார்பில் நடைபெறும் சிவா குலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மதியம் திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் அரியலூர் கிழக்கு மாவட்ட விசிக செயலாளர் கதிர் வளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சனாதன சக்தியாக செயல்படும் ஆளுநர் எனவும்,  நீட் தேர்வு ரத்து செய்யும் கோப்பில் கையெழுத்திடாத கவர்னர் எனவும், ஆர் எஸ் எஸ் போல் செயல்படும் கவர்னரை கண்டித்து கருப்புக் கொடி காட்ட முயற்சித்தனர்.

அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் இலக்கிய தாசன், வேல்முருகன், மாயாண்டி, சக்கராயுதம், சுரேஷ், ஆனந்தகுமார், ஈழ அரசன், சகாதேவன், வங்குடி சிவானந்தம், சுந்தர், செல்வமணி பன்னீர், துரைராசு, மங்குடி சத்யானந்தம், சிறுத்தை சிவா, ஜவகர் பாபு, வளவனூர் திருமாவளவன் உட்பட 19 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான போலீசார் கைது செய்து மீன்சுருட்டி தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com