உ.பி.யில் கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி... மெழுகுவர்த்தி ஏந்தியும், டார்ச் லைட்டை ஒளிர செய்து அஞ்சலி...

உத்தரபிரதேசத்தில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தூத்துக்குடியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உ.பி.யில் கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி... மெழுகுவர்த்தி ஏந்தியும், டார்ச் லைட்டை ஒளிர செய்து அஞ்சலி...

உத்திரபிரதேச மாநிலம் லக்கின்பூரில் கார் ஏற்றி கொல்லப்பட்ட  விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டணி மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது.

இதற்கு அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உயிரிழந்த விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளருக்கு கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், செல்போன்களில் டார்ச் லைட்டை ஒளிர செய்தும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததை கண்டித்தும்,  மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.