துபாய் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி...! குடும்பங்களுக்கு நிவாரணம்...!

துபாய்  தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி...! குடும்பங்களுக்கு நிவாரணம்...!

துபாய் நாட்டில் தீவிபத்தில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள  ராமராஜபுரத்தை சேர்ந்த முகமது ரபீக் மற்றும் இமாம் காசிம் ஆகிய இருவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பது.இதற்ககு அமைச்சர் மஸ்தான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை இரண்டு குடும்பத்தினருக்கும் வழங்கினார்.

துபாயில் நாட்டில் பிரிஜ் முரார் என்ற இடத்தில் 5 மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியர்கள் உள்பட பிற நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது.தீயானது மளமளவென பற்றி எரிந்து, அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தீ விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இதில் உயிரிழந்த இந்தியர்களில் 2 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராமராஜபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது ரபிக் , இமாம்காசீம் என்பது தெரிய வந்துள்ளது.இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் துபாயில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு இறங்கல் தெரிவித்தும் தலா பத்து லட்சம் ரூபாய் நிவாரண தொகையையும் அறிவித்தார் .

மேலும் இறந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இந்திய தூதரகத்திடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளபடும் என கூறினார்.இந்த நிலையில் இறந்தவரின் உடல்கள் துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் கொண்டு வரபட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி முதல்வர் அறிவித்த நிவாரண தொகை பத்து லட்சத்தையும் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கி உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com