’வேலியே பயிரை மேயும் கதை' திமுக உட்கட்சி பூசல்...ஓபிஎஸ் கண்டனம்!

’வேலியே பயிரை மேயும் கதை' திமுக உட்கட்சி பூசல்...ஓபிஎஸ் கண்டனம்!

சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய ஆளுங்கட்சியே அதனை சீரழித்து வருவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில், பேனர் விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு - திருச்சி சிவா ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எம்பி திருச்சி சிவா  - அமைச்சர் கே.என்.நேரு மோதல் சர்ச்சை தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், வன்முறையும் திமுகவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது எனவும், ஆளுங்கட்சியினரே வன்முறையில் ஈடுபவடுவது வேலியே பயிரை மேயும் கதை எனவும் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிக்க : டைம்டேபிள் போட்டு 2 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் கணவன்...வார கடைசியில் மட்டும் லீவாம்...!

திமுக ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இருக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக காவல் நிலையத்திலேயே வன்முறை வெறியாட்டம் நடைபெற்றிருப்பதாகவும், காவல் துறையை தன் வசம் வைத்திருக்கும் தமிழக அரசு வாய்திறக்காமல் இருப்பதை பார்க்கும்போது, அவரது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இதுதொடர்பாக முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையின் மூலம் ஓபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.