
முசிறியில் உள்ள ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் சித்தீஷ்வரன் என்ற சிறுவன் 2ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் வேனில் மாணவன் ஏற முயன்றபோது 400 ரூபாய் கட்டணம் பாக்கி இருப்பதாகக் கூறவே, 2 மணி நேரத்தில் நேரில் வந்து செலுத்தி விடுகிறேன் என தாய் உறுதியளித்ததாக தெரிகிறது.
அதையும் பொருட்படுத்தாமல் மாணவனை ஓட்டுநர் விட்டுச்சென்ற நிலையில், உறவினர்கள் அவரை விரட்டிப்பிடித்து சண்டையிட்டு சித்தீஷ்வரனை அழைத்துச்செல்ல வைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர் எவ்வளவோ வலியுறுத்தியும் மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கியதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர், முசிறி கல்வி மாவட்ட அலுவலரிடம் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.