திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... குத்தகை பணத்தை மீட்டு தரக்கோரி தீக்குளிக்க முயற்சி...

குத்தகைக்கு கொடுத்த பணத்தை மீட்டுத்தரக் கோரி திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on
திண்டுக்கல் அருகேயுள்ள கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன் - பவுனுத்தாய் தம்பதி. இவர்கள் வினோத் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 3 ஆண்டுகள் லீஸில்  3 லட்சம் ரூபாய் கொடுத்து வசித்து வந்துள்ளனர்.
ஒப்பந்த காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னதாக வீட்டை காலி செய்ய வினோத் கண்ணன் வற்புறுத்தியுள்ளார். 3 லட்சம் ரூபாயை திருப்பி தந்தால் காலி செய்வதாக முருகன் தெரிவித்த நிலையில், பணம் தர முடியாது எனக்கூறி வினோத் கண்ணன்  மிரட்டியதாக கூறப்படுகிறது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com