டிசம்பர் மாதத்தில் இரு மடங்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும்!!..

டிசம்பர் மாதத்தில் இரு மடங்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் இரு மடங்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும்!!..
Published on
Updated on
1 min read

  பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டிசம்பர் மாதத்திற்குள்  தடுப்பூசியை செலுத்தி முடிக்கும் நோக்கில்,  அதற்கான முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட மாநிலங்களிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா ஆலோசனை நடத்தி, தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்தியுள்ளார்.

தற்போது வரை இந்தியாவில் 117 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், டிசம்பர் மாதத்திற்குள் நூறு சதவீதம் தடுப்பூசியை செலுத்தி முடிக்க 15 புள்ளி 63 கோடி தடுப்பூசிகள் தேவை என்றும், ஆனால் அதை விட அதிகமாக 31 கோடி தடுப்பூசியை வழங்க கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனங்கள் உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேவைக்கு அதிகமான  தடுப்பூசிகளை நட்பு நாடுகளுக்கு வழங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com