போதைக்காக சானிடைசரை குடித்த இரண்டு பேர் உயிரிழப்பு: மருந்தக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு...

போதைக்காக சானிடைசரை குடித்த இரண்டு பேர் உயிரிழப்பு: மருந்தக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மது கிடைக்காததால் சானிடைசரை குடித்ததில் இருவர் உயிரிழந்த நிலையில், மருந்தக உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் மதுபானம் கிடைக்காமல், திருச்செந்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் உட்பட 2 பேர் கை கழுவு பயன்படுத்தப்படும் சானிடைசரை குடித்து உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக அம்பாசமுத்திரத்தில் மருந்தக உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மதுப் பிரியர்களுக்கு சானிடைசர் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  சானிடைசர் வாங்க வருபவர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்ட பின்னர், குறைந்த அளவே சானிடைசர் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.