இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு தேவதானம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் குளித்தலை சுங்ககேட் பகுதியில் உள்ள  மீன் கடையில் வேலை பார்த்து வந்தார். இநிலையில் நேற்று இரவு வேலை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது  திம்மாச்சிபுரம் புற்றுக் கோயில் அருகே எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இருசக்கர வாகனங்களில் வந்த மோகனும், நாகையை சேர்ந்த அரவிந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த லாலாப்பேட்டை போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.