உதயநிதி விளம்பர துறை அமைச்சராக இருக்க கூடாது - பாஜக உண்ணாவிரதம் ................
தமிழக அரசு சார்பில் விளையாட்டு வீரர் ஆகாஷின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் தவறினால் தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அமர் பிரசாந்த் ரெட்டி

நேபாளம் காட்மாண்டு பகுதியில் வாலிபால் விளையாடச் சென்று கடந்த 25 ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு வாலிபால் வீரர் ஆகாஷ் உயிரிழந்தார். இதனை அடுத்து சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்ட அவரது வாலிபால் வீரர் ஆகாஷ் உடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆவடி சாமு நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் உள்ளிட்ட அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து உயிரிழந்த ஆகாஷ் சொந்த கிராமமான திருவள்ளூர் மாவட்டம் கைவந்தூர் கிராமத்திற்கு தமிழக பாஜக விளையாட்டு மற்றும் இளைஞர் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி நேரில் வருகை புரிந்து ஆகாஷின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்
மேலும் படிக்க | 3வது நாளாக தொடர்ந்த சேவிலியர்களின் காத்திருப்பு போராட்டம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளம்பரத்திற்காக செயல்படுவதை தவிர்த்து அவரது துறை சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கட்சிக்காக மட்டும் செயல்படாமல் அவரது துறைக்காக செயல்பட வேண்டும்
மேலும் உயிரிழந்த விளையாட்டு வீரர் ஆகாஷ் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக அரசு சார்பில் அரசு வேலை வழங்குவதுடன் நிதி உதவியும் அளிக்க வேண்டும் எனவும் தவறினால் தமிழக பாஜக சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.