நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிலிருந்தே திமுகவினர் தயாராக வேண்டும் - உதயநிதி பேச்சு!

நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிலிருந்தே திமுகவினர் தயாராக வேண்டும் - உதயநிதி பேச்சு!

திமுகவினர் இப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொள்ளுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

கரூரில் நடைபெற்ற திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளை வழங்கினார். 

இதையும் படிக்க : வடமாநில தொழிலாளர்களை விட்டுவிட்டு, பிரதமர் மோடிக்கு எதிராக போராடுவதே சரியாக இருக்கும் - திருமாவளவன் !

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த பிரமாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியை நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சார பொதுக்கூட்டமாக கருதுமாறு தெரிவித்தார்.  திமுக ஆட்சியில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றின் போது உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக கூறினார். 

தேர்தல் வாக்குறுதியின் படி ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், சாத்தியமில்லை என்று கூறப்பட்ட மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தை சாத்தியப்படுத்தியதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இப்போதிலிருந்தே திமுகவினர் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொள்ளுமாறு அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.