
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. தெற்கு வங்ககடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது கன மழை பெய்தது. இவ்வாறு கொட்டி தீர்த்த கணமழையினால் ஆங்காங்கே சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது.
ஒரு சில பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் தங்களின் அன்றாட அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே வர முடியாத ஒரு சூழ்நிலையில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இரவு கொட்டி தீர்த்த கனமழையினால் மக்கள் தற்போது நடமாட முடியாத நிலைக்கும், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கொண்டு செல்ல முடியாத சூழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஆங்காங்கே தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறபடுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.