
முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும், மின்சார வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும், பிரதான அரசு நிகழ்வுகளின் போதும் மின்வாரிய அதிகாரிகள் அரசு நிகழ்வு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்வதுடன், மாற்று ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகையின் போது, மின் தடை ஏற்பட்டதன் எதிரொலியாக, தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.