நாதுராம் கோட்ஸே குறித்த சர்ச்சை பேச்சு: ஒன்றிய பா.ஜ.க. அமைச்சருக்கு வைகோ கண்டனம்.

நாதுராம் கோட்ஸே குறித்த சர்ச்சை  பேச்சு:   ஒன்றிய பா.ஜ.க. அமைச்சருக்கு வைகோ கண்டனம்.
Published on
Updated on
1 min read

நாதுராம் கோட்ஸே குறித்து சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய பாஜக அமைச்சருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று வெள்ளிக்கிழமை பீகாரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர்; அவர் பாபர், ஒளரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகையால் தங்களை பாபர், ஒளரங்கசீப் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது,” என்று கூறி இருக்கிறார்.

பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இந்துத்துவ சனாதன சக்திகள் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சாவர்க்கர் போன்றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்டனத்துக்கு உரியது.

தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்."

என கண்டனம் தெரிவித்துள்ளார்.    

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com