உரிமம் இல்லாத கடைகளுக்கு சீல்...சென்னை மாநகராட்சி அதிரடி...

உரிமம் இல்லாத கடைகளுக்கு சீல்...சென்னை மாநகராட்சி அதிரடி...
Published on
Updated on
2 min read

சென்னை பிராட்வே பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் உரிமம் புதுப்பிக்காத, உரிமம் இல்லாத கடைகள் மற்றும் வாடகை நிலுவைத்தொகை செலுத்தாத 70 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது.மொத்தமாக 30 லட்சம் ரூபாய் மாநகராட்சிக்கு நிலுவையில் உள்ளதாக தகவல்.

சென்னை மாநகராட்சியில் தொழில்வரி, நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் இல்லாமல் இயங்கிய 86 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை மாநகராட்சியில், தொழில் உரிமம் பெறாமல் கடை நடத்துபவர்கள் உரிய முறையில் சட்டப்படி உரிமம் பெறவும், நீண்ட காலமாக தொழில் வரி மற்றும் மாநகராட்சி அங்காடி கடைக்கான வாடகை செலுத்தாதவர்கள் உடனடியாக உரிமம் பெறவும், உரிய வாடகை மற்றும் வரியினை செலுத்தவும் மாநகராட்சி நீண்ட நாட்களாக அறிவுறுத்தி வருகிறது.

 நீண்ட நாட்களாக வரி மற்றும் வாடகை செலுத்தாததால் சென்னை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமம் பெறாத, தொழில் வரி மற்றும் நீண்டகால வாடகை தொகை செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை பிராட்வே பகுதி மற்றும் தங்க சாலையில் தொழில்வரி செலுத்தாத கடைகள் மற்றும் தொழில் உரிமம் பெறாத கடைகள், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாத மொத்தம் 70 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். குறிப்பிட்ட இந்த ஒரு பகுதியில் மட்டும் தொழில்வரி மற்றும் உரிமம் பெறாமல் செயல்பட்ட கடைகளால் சென்னை மாநகராட்சிக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் மேல் நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

மேலும், நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகே உள்ள கண்ணப்பர் திடலில் மாநகராட்சிக்கு சொந்தமான அங்காடி வளாகம் உள்ளது. இதில் உள்ள கடைகளில் 16 கடைகள் நீண்டகாலமாக வாடகை செலுத்தாதன் காரணமாக மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது. இந்த 16 கடைகளில் இருந்து மற்றும் தற்போது வரை சுமார் 24 லட்சம் ரூபாய் வாடகை தொகை நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டும் தொழில் வரி மற்றும் உரிமம் பெற்றதும், நிலுவை வாடகை செலுத்தியதும் கடைகளின் சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு உயர்த்தப்பட்ட வாடகை தொகையினை கொரோன காலத்துடன் சேர்த்து மொத்தமாக கட்ட சொல்வது கடை உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என கடை உரிமையாளர்கள் புலம்புவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com