
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்கள் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பண்ணீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் நாளை முதல் 28 ஆம் தேதி வரை உரிய கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வார்டு உறுப்பினருக்கு 5 ஆயிரம் ரூபாயும், நகர மன்ற வார்டு உறுப்பினருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினருக்கு ஆயிரத்து 500 ரூபாயும் விருப்ப மனுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.