நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - திமுக முன்னிலை

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - திமுக முன்னிலை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின. முக்கிய கட்சிகள் அனைத்தும் தனித்தனியே களம் கண்டதால் இந்த தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு கட்சியும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க இந்த தேர்தல் நல்வாய்ப்பாக அமைந்தது. எனவே, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.  

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.

குறிப்பாக, சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட மாநகாராட்சிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதேபோல், நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.