திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை!!

நாமக்கல்லில் திமுக சார்பில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.

திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை!!

திமுக சார்பில், உள்ளாட்சி அமைப்புகளை உறுதி செய்வதன்பொருட்டு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, நாமக்கல் - சேலம் சாலையில் நடைபெற்று வருகிறது. இதற்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் இருந்து, மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள் என 11 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். மாநாட்டையொட்டி, 400 அடி நீளம், 250 அடி அகலத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.