ஆளுநர்-முதல்வர் சந்திப்பு: நீட்டிலிருந்து விலக்களிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தல்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட  முன் வடிவிற்கு ஒப்புதல் வழங்குமாறு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வகை செய்யும், இளநிலை மருத்துவ படிப்பு சேர்க்கை சட்டத்தின் சட்ட முன்வடிவு, கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது நிறைவேற்றப்பட்டது.  ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கை அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த முன்வடிவு, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்த முதலமைச்சர், சட்டமுன் வடிவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தினார்.  சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் பங்கேற்று விரைவாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது..